துணை முதல்வரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 48ஆவது பிறந்த நாளையொட்டி, வேலூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டக் கழகச் செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான ஏ.பி.நந்தகுமாரின் முயற்சியால் பல்லாயிரக்கணக்கானோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு, கரூரில் முன்னாள் அமைச்சர் வி.எஸ்.செந்தில்பாலாஜி போன்றோர் பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்குவதைப் போல் வேலூர் மாவட்டத்திலும் ஏ.பி.நந்தகுமார் வழங்கத் தொடங்கியுள்ளார்.
பேர்ணாம்பட்டில் நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் விஷ்வா தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், குடியாத்தத்தில் கவுன்சிலர் அர்ச்சனா நவீன் தலைமையில் நடைபெற்ற விழாவில் 250 துப்புரவுப் பணியாளர்களுக்கு நல உதவிகள், அணைக்கட்டில் மாவட்ட சேர்மனும் ஒன்றியக் கழகச் செயலாளருமான மு.பாபு தலைமையில் நடைபெற்ற விழாவில், மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நல உதவிகள் என தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வேலூர் தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் 8.12.2025-இல் மாவட்ட திமுக மகளிரணி தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி. ஜெயந்தி பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற விழாவில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற அசத்தலான நிகழ்ச்சியில் வருகை தந்த ஏ.பி.நந்தகுமாரை வரவேற்கும் விதமாக , 'ரேம் வாக்' அமைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு வருகை தந்த அவரை நூற்றுக்கணக்கான பெண்கள் மலர் தூவி வரவேற்றனர்.
கேரள செண்டை மேளக் கலைஞர்கள், வீர சாகச நிகழ்ச்சிகளை நடத்தும் இளைஞர்கள்- பெண்கள் , வாண வேடிக்கைகள் முழங்க நந்தகுமாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவுக்கு வருகை தந்தவுடன் நந்தகுமாருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், அவர் மேடையில் இருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் பங்கேற்ற நந்தகுமாருக்கு அவரது உருவப் படம் பொறித்த நான்கரை அடி ஓவியத்தை முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் நினைவுப் பரிசாக வழங்கினார். விழாவில் தலைமைக் கழக பேச்சாளர் த.பாரி பேசும்போது, "வேலூர் மாவட்ட திமுக மகளிரணி மாநாட்டைப் போன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிரணியினர் திரண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
இதேபோல், தலைமைக் கழக பேச்சாளர் பெரிய கோட்டீஸ்வரன், கவிஞர் தூயவன் ஆகியோர் கழக அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினர்.
முன்னாள் எம்பி தி.அ.முகமது சகி பேசும்போது, மசூதியில் வழிபாட்டு ஒலி கேட்க சில நிமிடங்கள் பேச்சை நிறுத்திவிட்டு, பின்னர் தொடர்ந்தார்.
1048 மகளிருக்கு புடவைகள், 248 தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை மற்றும் குடை , 248 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை, 148 மகளிர் கபாடி வீராங்கனைகளுக்கு சீருடை, 48 கழக முன்னோடிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பொற்கிழியை நந்தகுமார் வழங்கினார்.
நல உதவிகள் குறிப்பிட்ட அளவுக்கு மேலும் மக்கள் வந்து கேட்க மாஜி எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபனும் வழங்கினர்.
விழாவில் எம்எல்ஏ நந்தகுமார் பேசும்போது, குடியாத்தம் மாநகரில் இளந்தலைவர் உதயநிதிக்கு பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்ற கேள்வியுடன் எப்படி ஓட்டு கேட்க வேண்டும் என்று எ ன்பதை விளக்கும் வகையில் நான்கரை ஆண்டு காலத்தில் மாண்புமிகு முதல்வர் & துணை முதல்வர் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டு, குடியாத்தம் தொகுதிக்கு மட்டும் என்னென்ன திட்டங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்துள்ளது என்பதை அடுக்கடுக்காய் எடுத்துரைத்தார்.
மேலும், 2026-இல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மீசையை முறுக்கி விட்டு மக்களைத் தேடிச் சென்று ஓட்டு கேட்கும் உரிமை திமுக காரனுக்கு மட்டுமே உள்ளது என்று நெஞ்சை நிமிர்த்திப் பேசி பலத்த கை தட்டலுக்கு மத்தியில் இந்த பேச்சு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என வியக்கும் வகையில் உரையாற்றினார். எதிர்க்கட்சியினரையும் ஈர்க்கும் வகையில் தெள்ளத் தெளிவாய் எதார்த்த அரசியல் கருத்துகளைப் பரப்பி உடல் மொழியிலும் குரல் மொழியிலும் அபார திறமையை வெளிப்படுத்தி தொண்டர்களின் மனதை அள்ளிச் சென்றார்.
நகர்மன்றத் தலைவர் எஸ். சௌந்தராஜன் . பேரணாம்பட்டு கிழக்கு ஒன்றியச் செயலாளர் கே. ஜனார்த்தனன் , பேர்ணாம்பட்டு நகரச் செயலாளர் ஆலியார் ஜூபர் அஹமத், குடியாத்தம் ஒன்றியச் செயலாளர் கல்லூர் கே ரவி, பேர்ணாம்பட்டு மேற்கு செயலாளர் டி .டேவிட் , பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியச் செயலாளர் எம். டி. சீனிவாசன் , தலைமை செயற்குழு உறுப்பினர் டி. விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கோ.வாசுகி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் எம். மஞ்சுளா, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எஸ். உத்தரகுமாரி, மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் கோ. மகேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி தொண்டர் அணி தலைவர் வே. சரோஜா, துணை அமைப்பாளர் ஜெ. புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் .தி.அ. முகமது சகி, எம்எல்ஏ வி. அமுலு விஜயன், ஒன்றியக் குழுத் தலைவர் என். இ. சத்யானந்தம், மாவட்ட துணை செயலாளர்கள்
ஜி எஸ். அரசு, எம்.பிரதாப்குமார், பேர்ணாம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவர் சித்ரா ஜனார்த்தனன், பேர்ணாம்பட்டு நகர் மன்றத் தலைவர் பிரேமா வெற்றிவேல், மாதனூர் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் டி சாந்தி சீனிவாசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் த. புவியரசி, கே.கண்ணன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் பாண்டியன்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இறுதியில் குடியாத்தம். நகர திமுக மகளிர் அணி அமைப்பாளர் ஆர். பிரியா நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை