Header Ads

  • சற்று முன்

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக இன்று உலக சர்கரை நோய் தினம் (World Diabetic day) விழிப்புணர்வு:

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதலாம் ஆண்டு சேர்க்கை  மாணவர்கள் மருத்துவர்கள் தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவமனையில் படித்து வருகின்றனர்.

    எய்ம்ஸ் மருத்துவமனை முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சார்பில் இன்று தோப்பூரில் உலக சர்கரை நோயாளிகள் தினவிழிப்புணர்வு  நிகழ்ச்சியில் பங்கேற்பு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக நடைபெறும் முதல் நிகழ்ச்சி இதில் மதுரை எய்மஸ் மருத்துவ கல்லூரி முதன்மை இயக்குனர், Drஅனுமந்ராவ் இணை நிர்வாக இயக்குநர் லெப்டினட் கர்னல் பரம்வீர் சிங் ஜம்வால், கண்காணிப்பு பொறியாளர் லெப்டினன்ட் கர்னல் அலோர் தேவராணி, செயற்பொறியாளர் நாகராஜு, நிர்வாக அலுவலர் ஸ்ரீனிவாசன், மதுரை எய்ம்ஸ் இயக்குநர் நாகராஜன் வெங்கட்ராமன், 'மற்றும் ராமநாதபுரத்திலிருந்து 8 மருத்துவ பேராசிரியர்கள், 50 பயிற்சி மாணவர்கள் உலக சர்கரை நோய் தினத்தை முன்னிட்டு தோப்பூரில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    பின்னர் தோப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  கிராம மக்களுக்கு சர்கரை நோய்க்கான இரத்த அழுத்தம், இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தோப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சேகர், துணை தலைவர் சந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad