குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு, ரூ.100-க்கு விற்பனை


 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு, ரூ.100-க்கு விற்பனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகா துவக்கி வைத்தார் 

தீபாவளி பண்டிகையைப் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அன்றாடச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ ஒன்று ரூ.100 என்ற சலுகை விலையில், இன்று முதல் 7-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவுப் பண்டக சாலைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள் மற்றும் 4 நடமாடும் காய்கறி கடைகள் (சென்னையில் மட்டும்) மூலம் விற்பனை துவக்கம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று இடங்களில் வெற்றி காய்கறி தொகுப்பு திட்டம் துவங்கப்பட்டது, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செட்டி தெரு பகுதியில் உள்ள நியாய விலை கடையில் வெற்றி காய்கறி தொகுப்பு திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகா பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். 

பெரிய வெங்காயம் (500 கிராம்), தக்காளி (500 கிராம்), கத்தரிக்காய் (250 கிராம்), உருளைக்கிழங்கு (250 கிராம்), கேரட் (200 கிராம்), பீன்ஸ் (200 கிராம்), பச்சை மிளகாய் (100 கிராம்), எலுமிச்சை (100 கிராம்), இஞ்சி (50 கிராம்), தேங்காய் (400-450 கிராம்) ஆகியவை இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளன.

கொள்முதல் விலை, அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.100 விற்பனை விலை தொகுப்பை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். ஒரு காய்கறித் தொகுப்பு ரூ.100 என்ற விலையில் மட்டுமே நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். கூடுதலாகவோ குறைவாகவோ வசூலிக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் சினேகா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

கருத்துரையிடுக

புதியது பழையவை