காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக சர்வதேச பேரிடர் தணிக்கும் நாளையொட்டி , ஒத்திகை நிகழ்ச்சி பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. சர்வதேச பேரிடர் மீட்பு தின தணிக்கும் நாள் சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் பேரிடர் ஒத்திகை இன்று குன்றத்தூர் தாலுகா, பரணிப்புத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பத்திரமாக வெளியேறுவது மற்றும் பிறரை மீட்பது குறித்து செயல் முறையில் தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் இணைந்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி காட்டினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சிகளை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.