குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

திருமங்கலத்தில் ரூபாய் 10.86 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

திருமங்கலத்தில் ரூபாய் 10.86 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம் -  பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,  போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம். மதுரை மாவட்டம் திருமங்கலம் பழைய பேருந்து நிலையத்தை முழுவதுமாக இடித்து,  அதே இடத்தில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ரூபாய் 10. 86 கோடி செலவில் கட்டுவதற்கான பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்காலிகமாக இப்பேருந்து நிலையத்தை அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இயக்குவதற்கான நடவடிக்கையை  நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இதனுடைய தற்காலிக பேருந்து நிலையத்தினால் , எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கலந்தாய்வு கூட்டம், நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் , துணைத் தலைவர் ஆதவன் , நகராட்சி அதிகாரிகள் ஆகியோரின் முன்னிலையில், நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது .

இதனை தொடர்ந்து தற்காலிகமாக இயக்கப்பட உள்ளபேருந்து நிலைய இடமான, ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மைதானத்தை பார்வையிட்டனர். 

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

கருத்துரையிடுக

புதியது பழையவை