Header Ads

  • சற்று முன்

    ராகு கேது பெயர்ச்சி யோகம் 2020 -துலாம் - விருச்சிகம் - தனுசு

     துலாம் 

    துலாம் ராசிக்காரர்களே ராகு 8ஆம் வீட்டிற்கும் கேது இரண்டாம் வீட்டிற்கும் வருகிறார்கள். ஜாதகத்தில் 8ஆம் இடம் என்பது கெட்ட ஸ்தானமாகும். சஞ்சலம்,ஏமாற்றம் விபத்து,பீடை,கௌரவ பங்கம்,கவலை,இழப்பு அந்த இடத்திற்கு பாவ கிரகம் வந்தால் அழிப்பார். இந்த ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்ட்டத்தையும் பெருமை புகழையும் கொடுக்கும். ராகு சூது கிரகம். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும்.சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். சிலர் பிள்ளைகள் படிப்புக்கு ஊரை மாற்றலாம். பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம். குடும்ப ஸ்தானத்தில் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்க முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும்

    விருச்சிகம் 



    விருச்சிகம் ராசிக்காரர்களே, உங்க ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகிறார்கள். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். கடன் வாங்கி நொந்து போனவர்களுக்கு புதிய நட்பு கூட்டு தொழில் உதவி கிடைக்கும். கணவன் மனைவி பிரச்சினை நீங்கி ஓன்று சேரலாம். கோர்ட் விவாகரத்து என்று அலைந்தவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமைந்து மறுமணம் நடக்கலாம் ராசியில் கேது வருவதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். கேதுவுக்கு குரு பார்வை கிடைப்பதால் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடிவு விமோசனம் ஆகியவற்றை அடையலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகள் படிப்புக்காக கடன் வாங்குவீர்கள். ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.

    தனுசு 

    தனுசு ராசிக்காரர்களுக்கு எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும். ஏழரை சனியாலும் ஜென்ம கேதுவாலும் பாதிக்கப்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும். போட்டி பொறாமை பொடிபொடியாகும். தொழில் முயற்சிகள் கை கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். தடைபட்ட திருமணம் நடைபெறும். நீண்ட நாள் கனவான புத்திரசம்பத்து கிடைக்கும். மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் கேது வருவதால் புது முயற்சிகள் கை கூடும். விரைய செசேமிப்புகள் உயரும். சுப தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள். உங்களின் நீண்ட நாள் கடன்களும் அடையும். இந்த ராகு கேது பெயர்ச்சி யோகம் செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad